ஆட்சியமைக்க நடவடிக்கை! கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களுருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வெற்றி முகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு வர காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, கர்நாடகாவில் வெற்றி உறுதியாகும் நிலையில் இருப்பதை அடுத்து, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கி உள்ளது.
இதனிடையே, ஆட்சி அமைக்க தேவையான பெருபான்மை இடங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று பெங்களூரு நகருக்கு வந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைமை உத்தரவிட்டிருந்தது. கட்சித் தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.