Today’s Live: சென்னையில் ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ்..!

LIVE NEWS

போராட்டம் வாபஸ்:

சென்னையில் ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாததை எதிர்த்து கடந்த 5 நாட்களாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இவர்களை நேரில் சந்தித்த அமைச்சர் பொன்முடி, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

13.05.2023 4:50 PM

கர்நாடக சட்டசபை:

கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்தபூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் 81,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரியங்க் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட்டை எதிர்த்து 13,640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

13.05.2023 3:50 PM

மிகப்பெரிய வெற்றி:

‘அரசியல் ரீதியான தேர்வுகளில் கர்நாடக மக்கள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்பதை தற்போது நிரூபித்துள்ளார்கள்’ என சித்தராமையா கூறியுள்ளார். தேர்தல் வெற்றி குறித்து பேசிய அவர், ‘இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஆபரேஷன் தாமரைக்கு பாஜக அதிக அளவில் பணம் செலவழித்தது. ஆனால், ராகுலின் நடைபயணம் கட்சியினருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

13.05.2023 1:25 PM

டி.கே.சிவக்குமார் வாழ்த்து:

கர்நாடக தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதாவை விட முன்னேறி வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த கட்சித் தொண்டர்களுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

13.05.2023 12:30 PM

பசவராஜ் பொம்மை வெற்றி:

பாஜகவை சேர்ந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ஷிக்கான் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். ஆரம்பம் முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த பசவராஜ் பொம்மை தற்போது வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13.05.2023 12:20 PM

வெறிச்சோடிய பாஜக:

கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா தேர்தலில் 130 இடங்களில் வெற்றிபெறுவோம் எனக்கூறி வந்த பாஜக தற்போது 73 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகம் தொண்டர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

13.05.2023 11:50 AM

ஊழலுக்கு எதிராக போராடுவேன்:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் உள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை மாநிலத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்றும், வளர்ந்து வரும் ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்றும் கூறினார்.

13.05.2023 11:26 AM

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதை அடுத்து, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்களுருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

13.05.2023 11:10 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்