நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் தான் எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டு தான் இருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிந்து சமூக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இருப்பினும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்கள் வீடுகளிலேயே இயற்கையான பல மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாக பலர் மாட்டு சிறுநீர் அதாவது கோமியத்தை குடிப்பதாலும் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதாலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். ஆனால் இது வதந்தி எனவும், இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதால் உடலுக்கு வேறு பல நோய்கள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் மாட்டு கோமியம் குடிப்பது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என நம்பி தான் வருகின்றனர்.
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் நான் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன், அதனால் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்வதில்லை. எனவே தான் எனக்கு தற்பொழுது வரை கொரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும் எனவும், அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளையும் வீட்டில் நட்டு வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களுக்கு அதிகப்படியான மரம் நட்டு வளர்க்கும் பொழுது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது எனவும் இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…