Categories: இந்தியா

சாலை சரியாக இல்லையா.? டோல்கேட் கட்டணம் இல்லை.! மத்திய அமைச்சர் அதிரடி.!

Published by
மணிகண்டன்

டெல்லி:  தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும்.

இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை பராமரிப்பு சரியாக இல்லை என்றால் அந்த பகுதி சுங்கச்சாவடியில் ஒப்பந்த நிறுவனமானது சுங்க கட்டணத்தை வசூல் செய்ய கூடாது என பேசினார்

மேலும், மக்கள் தரமான சாலையில் பயனாகவே சுங்க கட்டணத்தை செலுத்துகிறார்கள். சேதமடைந்த சாலைகள், சேறுகள் நிறைந்த சாலைகளில் சுங்க கட்டணம் வசூலித்தால் அது மக்கள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும்.

இனி வரும் காலங்களில் Fastag முறையில் இருந்து மாற்றம் பெற்று GNSS முறை மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் சரக்கு அல்லது வாடகை வாகனங்களில் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் அனைத்து வாகன பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என கூறினார்.

அடுத்து,  இந்த கட்டண முறைகள் ப்ரீபெய்டில் (முன்கட்டணம்) இருந்து போஸ்ட்பெய்டுக்கு (பயன்பாட்டுக்கு பின்) மாற்றப்படலாம். என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்தரங்கில் பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago