கொரோனா,கேன்சர் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நவீன தொழில்நுட்ப முறையை ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவ ஆய்வுக்காகவும் கொரோனா,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்று,ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எம்ஐடி விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் விளைவாக,’ஆர்கனாய்டுகள்’ எனப்படும் மனித மூளை திசுக்களை செயற்கையாக வளர்க்கும் “3D பிரிண்டட் இங்குபெஷன் மெஷினை” கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.இதன்மூலமாக,மூளை திசுக்களின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு,கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை மருத்துவ ஆய்வு,கேன்சர் மற்றும் மூளை நரம்பியல் நோய்களான அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை முறை அளிப்பது என்பதையும் கண்டறிய முடியும்.
பொதுவாக,நீண்ட நாட்கள் மூளையின் திசுக்களை செயற்கையாக வளர்ப்பது சவாலானதாக இருக்கும்.ஏனெனில்,இன்குபேசன் மற்றும் இமேஜிங் முறையில் செல்களை தனியாக பிரித்து ஆராயும்போது அது தவறான முடிவுகளையும் அல்லது அந்த செல்கள் மாசடைய வாய்ப்பும் உள்ளது.ஆனால்,தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறையின் மூலம் செல்களை எளிதாகவும்,எந்த தடையும் இன்றியும் வளர்க்க முடியும்.
இதன்மூலம்,முன்கூட்டியே கொரோனா பாதிப்பு மற்றும் கேன்சருக்கான மருந்துகளை எளிதில் கண்டறிய முடியும்.அதனால்,வரும் காலங்களில் இந்த புதிய முறை மருத்துவ உலகில் வரப்பிரசாதமாக கருதப்படும்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…