ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் நாளைக்குள் இணைக்க வேண்டும், என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆதார், பான் எண்ணை இணைக்கவில்லை எனில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை ஆதார் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள் https://www.incometaxindiaefiling.gov.in என்ற கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார் பான் கார்டை இணைக்கலாம்.
பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…