உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதமாக ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லை என ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 132 கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 216 குழந்தைகள் பிறந்துள்ளது.
அந்த 216 குழந்தைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தை இல்லை என்ற தகவல் வெளியாகி யுள்ளது. இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் கூறும்போது உத்தரகாசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ஆய்வு நடத்தினோம். அதில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை சில இடங்களில் ஒரு சில பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
அந்த பகுதியில் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும் கண்காணிப்பை வலுப்படுத்த சுகாதாரத்துறை ஊழியர்களான ஆஷா ஊழியர்களுக்கு உத்தரவு விட்டு உள்ளது. மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா ?,பெண்ணா? என்பதை கண்டறிந்து பெண்கள் கருவை கலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…