#Breaking:மக்களே உஷார்...மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணம்;கடந்த ஒரே நாளில் 1733 பேர் உயிரிழப்பு!

In India,1,61,386 people have been newly infected with a corona in the last 24 hours.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,61,386 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1733 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,16,30,885 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,67,059 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,61,386 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 5,500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,16,30,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1733 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,97,975 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,81,109 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,95,11,307 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  16,21,603 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,67,29,42,707 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57,42,659 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.