Categories: இந்தியா

50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. ஸ்பெஷல் வீடியோ முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% வரிவிதிப்பு வரை.

Published by
மணிகண்டன்

50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேற்று பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதன் மீதான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக வரிகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (GST) எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரிகள் விதிப்பு, வரிகள் குறைப்பு பற்றி ஆலோசிக்க மாதந்தோறும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதில் வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படும். இந்த முடிவுகள் மத்திய அரசு தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.

50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் : 

இதன்படி நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவங்கியது. இதில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது 50 ஆவது ஆலோசனைகூட்டம் ஆகும். ஆதலால் நேற்று இதற்கான சிறப்பு வீடியோவை மத்திய நிதியமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. மேலும், 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு கவர் மற்றும் அதற்கான சிறப்பு ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு தபால் தலையை டெல்லி தலைமை போஸ்ட் மாஸ்டர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்தார். அதன்பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

  • ஆன்லைன் விளையாட்டுக்கள் (ரம்மி உள்ளிட்டவை), கேசினோக்கல் மற்றும் குதிரை பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
  • கேன்சர் மருந்து மற்றும் அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் வரி விலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.
  • சமைக்கப்படாத வத்தல் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • மீன் பேஸ்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.
  • ஆடைகளில் பயன்படுத்தப்படும் ஜரிகை நூல் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்டீல் மீதான குறிப்பிட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.
  • சினிமா தியேட்டரில் வைக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் வரிகள் 18% இருந்து 5% குறைக்கப்பட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு வைத்த கோரிக்கைகள் :

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். இதில், ஏற்கனவே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அதனை முறைப்படுத்த சட்டம் இயற்றியுள்ளது. எனவே தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதன் மூலமாக ஆன்லைன் தடை சட்டத்திற்கு முரணாக இந்த பரிந்துரை அமைந்துவிட கூடாது என வலியுறுத்தினார்.

புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்தின் மீதான வரி விலக்கு பரிந்துரைக்கு தமிழக அரசு தனது ஆதரவை தெரிவிக்கிறது என்றும். அரிய வகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து இருப்பதற்கும் தமிழக அரசு ஆதரவை தெரிவிப்பதாக தங்கம் தென்னரசு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமத்தில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

10 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

11 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago