பிற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் தற்போதைய சூழலில்,இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்து வருகிறது கேரள அரசு.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.இதனால் பல மாநிலங்களில்,படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.இந்த சமயத்தில்,கேரளாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று கொச்சி பெஸோ நிறுவனத்தின் துணை சீஃப் கண்ட்ரோலர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேணுகோபால் கூறுகையில்,”எங்கள் கேரளத்துக்கு தினமும் ஆக்சிஜன் அளவு 85 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது.கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்,அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் செய்து வருகிறோம்.
மேலும்,கேரள மாநிலத்துக்கு தினமும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவை விட கூடுதலாகவே ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது.தற்போது கேரளத்தில் 11 ஏர் சப்பிரஷன் யூனிட்டுகள் உள்ளன.இதனால்,523.83 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவு கையிருப்பில் உள்ளது.
இதனையடுத்து,கர்நாடக மாநிலத்திற்கு தினமும் 25 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்கிறோம்.மேலும்,தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கும் தினமும் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ஆக்சிஜன் ஃபில்லிங் பிளாண்ட்டுகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தின் பலன் தான் நமக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல்,ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் சிலிண்டர்களை ஆக்சிஜன் சிலிண்டர்களாக மாற்றியுள்ளோம்.மேலும்,நைட்ரஜன் சிலிண்டர்களையும் ஆக்சிஜன் சிலிண்டர்களாக மாற்றி வருகிறோம்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வரை இந்த ஏற்பாடுகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.
தற்போது,நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும்போது,கேரள மாநிலம் மட்டும் சிறப்பாக செயல்பட்டு பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்து வருவது பாராட்டுதலுக்குரியது ஆகும்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…