வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாதவர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.அதன்படி,முதலில் காலக்கெடு ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரையும்,பின்னர் தற்போதைய காலக்கெடுவாக டிசம்பர் 31, 2021 வரையும் நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில்,2020-21 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.தனிநபர்களுக்கான ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டிய நிலை இருப்பதாக பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில்,கடந்த 2019-20 நிதியாண்டை ஒப்பிடும்போது,நடப்பு ஆண்டான 2020-21 நிதியாண்டில் குறைவான எண்ணிக்கையிலான வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,ஜனவரி 11,2021 அன்று வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ ட்வீட்டின்படி, 2019-20 நிதியாண்டில் 5.95 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன (2019-20 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 10,2021). இருப்பினும், டிசம்பர் 15, 2021 வரையிலான தரவுகளின்படி,3.59 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்,டிசம்பர் 31, 2021 காலக்கெடுவிற்கு இன்னும் 8 நாட்களுக்கும் குறைவாக உள்ள நிலையில்,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 லட்சத்து 77 ஆயிரம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யாதவர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி,வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்பவர்கள் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…