இந்த நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தடை!

Published by
Edison

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த  மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியா வந்தனர்.

ஆனால்,தற்போது இந்திய மாணவர்களை சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்க சீன அரசு தயக்கம் காட்டி வருகிறது.அதே சமயம்,பெய்ஜிங் தாய்லாந்து,பாகிஸ்தான் மற்றும் இலங்கை மாணவர்களை சீன அரசு  திரும்ப அனுமதித்துள்ளது.மேலும்,இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்,கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தார்,ஆனால் பெய்ஜிங் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில்,இந்தியா வரும் சீன பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.சீன அரசு,இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் வரை இந்த தடை நீக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான IATA, “சீனா நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது” என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

20 minutes ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

3 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

4 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

4 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

4 hours ago