நிலவில் இந்தியா: மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி வாழ்த்து!

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. மிகவும் சவாலான இந்த பணியை வெற்றிகரமாக சாத்தியமாக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது X தள பக்கத்தில், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் சாட்சியமளித்துள்ளனர்.
இந்தியா இப்போது விண்வெளியில் சூப்பர் லீக்கில் உள்ளது. அனைத்து பெருமைமிக்க கட்டிடக் கலைஞர்களுக்கும், பயணத்தின் பங்குதாரர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கம்பீரமான தருணத்தைக் கொண்டாடுவோம், மேலும் அறிவு மற்றும் பயன்பாடுகளின் எல்லைப் பகுதிகளில் இந்தியா மேலும் முன்னேற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Hail Chandrayaan-3!
Hail its stupendous success!!
Hail @isro!!
Hail our nation’s magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!Our scientists have testified the country’s scientific and technological progress. India is now in the super…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023