இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நேற்று ஒரே நாளில் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 4,628,549 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 308,645 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகளவில் உள்ளது. இந்தியா குறைவான தாக்கம் கொண்ட நாடாக கருதப்பட்டாலும், தற்பொழுது வரை 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்பொழுது வரை 2,752 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 30,153 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள், குணமாகியவர்கள் தவிர்த்து தற்பொழுது 52,773 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் புதியதாக 3,787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 104 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா ஆரம்பமாகிய சீனாவில் கூட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,933 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,633 ஆகவும் தான் உள்ளது. தற்பொழுது புதியதாக 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அத்துடன் இறப்பு ஒன்றுமில்லை.
சீனாவை விட இந்தியா கொரோனா பாதிப்பில் அதிகளவில் உள்ளது. ஆனால் உயிரிழப்பு பாதிக்கு பாதி குறைவாகவே உள்ளது. சீனாவையும் மிஞ்சி கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, நாம் பாதுகாப்பாக “தனித்திருப்போம், விழித்திருப்போம், வீட்டிலிருப்போம்”.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…