ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் இன்று காலை 06.30 மணி அளவில் நடைபெற்றது.
இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். இறந்த டேராடூனை சார்ந்த லன்ஸ் நாயக் சந்தீப் என தெரியவந்தது.
இவர் 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக இரு நாடு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர் லன்ஸ் நாயக் சந்தீப் இறந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதலை நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ சாவடி மீது நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…