இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார்.
அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல செய்தி. இந்தியாவில் அதே தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உருவாக்கி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒரு பெரிய படியாகும் என்று குலேரியா ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்தார்.
இதற்கிடையில், புனேவை தளமாகக் கொண்ட SII, உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் என்ற தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் கோரியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கோவிஷீல்ட் ரோல்அவுட் ஜனவரி மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் 40-50 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…