WFI Prez Election [FileImage]
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தேர்தல் அதிகாரியாக ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நியமிப்பு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOC) அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் (12 ஆண்டுகள்) முடிவடைந்த நிலையில் WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்து, இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதையடுத்து தேர்தல் வரும் ஜூலை 4இல் நடைபெறுகிறது.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…