கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடப்பட்ட 5 கடைகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது ஒரு கடைக்கு அருகில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.
இந்த வீட்டிலும் திருட்டு நடந்திருக்கலாம் என எண்ணி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் இருந்து ஒரு பொருள்கள் கூட திருட்டு போகவில்லை. மேலும் வீட்டின் சுவரில் திருடன் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தது தெரியவந்தது.
அந்த சுவற்றில் “இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்துவிட்டேன். வீட்டில் இருந்த புகைப்படங்களை வைத்து தான் இது ராணுவ வீரரின் வீடு என எனக்கு தெரிந்தது. தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என சுவற்றில் எழுதி இருந்தது.
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…