Manipur CM n Biren Singh [FIle Image]
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே அதிரவைத்தது. தற்போதுவரையில் மணிப்பூர் மாநில கலவரம் பற்றிய பேச்சுக்கள் நாடாளுமன்றம் மட்டுமல்லாது சாமானிய மக்கள் வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிலும், மணிப்பூரில் இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரமான சம்பவம் பலரது இதயத்தை உலுக்கியது. இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து துவங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியதில் இருந்து தொடங்கியது.
இதில் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 170க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தான் இருந்து வருகிறது. இருந்தும் பாதுக்காப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு முன்பு போல பெரிய கலவரங்கள், உயிர்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் என்.பைரன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (செப்டம்பர் 22) முதல் அடுத்த 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களிடம் வைத்து இருக்கும் ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது .
மேலும், அப்படி வைத்து இருக்கும் ஆயுதங்களை மத்திய , மாநில பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு பறிமுதல் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து, இன்று (செப்டம்பர் 23 ) முதல் மணிப்பூர் மாநிலத்தில் விதிக்கப்பட்டு இருந்த இணையதள சேவை தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் அலுவலக உபயோகத்திற்காக மட்டும் பிராட்பேண்ட் சேவைகள் செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில் இன்று முதல் அனைத்து வகையான இன்டர்நெட் சேவையும் செயல்பாட்டில் வர ஆரம்பித்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…