கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909 ஆக அதிகரித்துள்ளது என்றும் இதில் 862 பேர் இந்தியர்களும், 47 பேர் வெளிநாட்டினர். கொரோனாவால் 19 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கினால் எச்சரிக்கும் அப்ளிகேஷனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அப்ளிகேஷன் பெயர் “கொரோனா கவச் ஆப் “ இந்த ஆப் தற்போது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.முதலில் ஸ்மார்ட்போனில் கொரோனா கவச் ஆப் டவுன்லோட் செய்த பிறகு உங்கள் தொலைபேசி எண் மூலம் கொரோனா கவச் ஆப்பிற்குள் நுழைய முடியும். பின்னர் நீங்கள் கொடுத்த நம்பருக்கு ஒடிபி வரும் அந்த ஒடிபி நம்பர் கொடுத்தவுடன்.
தற்போது எவ்வளவு பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எவ்வளவு பேர் இறந்துள்ளனர். என்பது குறித்த விபரங்கள் தெரியும்.
அதன் பின்னர் உங்கள் உடல்நிலை, குறித்து கேள்விகள் கேட்கப்படும் அனைத்திற்கும் பதிலளித்த பிறகு நீங்கள் அளித்த பதில் அடிப்படையில் இந்த ஆப் உங்களை வெவ்வேறு வகைகளாக வரிசைப்படுத்தும்.
கொரோனா கவச் ஆப் கீழே நடுவில் ஒரு பட்டன் உள்ளது. அதனை அழுத்தினால் நமது அருகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் எச்சரிக்கும்.
மேலும் ஆப்பை பாதிக்கப்பட்டவர்கள் வைத்திருந்தாலோ அல்லது பதிவு செய்திருந்தாலோ மட்டுமே நமக்கு எச்சரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…