“சுல்லி டீல்ஸ்” எனும் செயலி மூலமாக விற்பனைக்காக பட்டியலிடப்பட்ட இஸ்லாமிய பெண்கள்!

Published by
Rebekal

சுல்லி டீல்ஸ் எனும் செயலி மூலமாக இஸ்லாமிய பெண்கள் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட சுல்லி டீல்ஸ் எனும் செயலியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்கள் பலர் பெயர் மற்றும் புகைப்படத்துடன் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இஸ்லாமிய வழக்கத்தின் படி சுல்லி என்பது பெண்களை இழிவாக அழைக்கக்கூடிய சொல் எனக் கூறப்படுகின்ற நிலையில் இந்த சுல்லி எனும் வார்த்தையை பயன்படுத்தி இஸ்லாமிய பெண்களை விற்பனை செய்வதற்காக பட்டியலிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்ற பெண்களில் பெரும்பாலும் சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், நடிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர் தான் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலியில் 90க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் தகவல்கள் இருந்ததாகவும், ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதும் உடனடியாக இந்த செயலியை மத்திய அரசு பிளாக் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த செயலியில் பட்டியலிடப்பட்டு வந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான் மற்றும் வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சசி தாரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது இது போன்ற செயலில் ஈடுபடக் கூடியவர்களை  கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், இது குறித்து டெல்லி காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதுடன், மேற்கொண்டு இது குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் டுவிட்டரில் இருந்து அனுமதியின்றி எடுக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

11 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

24 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago