ஜபால்பூர் பெண்ணின் பிடிவாதம்! 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது!

Published by
லீனா

ஜபால்பூர் பெண்ணின் 28 ஆண்டுகால விரதம் முடிவுக்கு வந்தது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருபவர், ஊர்மிளா சதுர்வேதி.  1992-ம் ஆண்டு,  அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டது. அப்போது, இந்த பெண் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை, நான் பாலும், பழமும் தான் சாப்பிடுவேன் என சபதம் விடுத்திருந்தார்.

அதன் பின் இவர், ராமாயணத்தை ஓதுவதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதையடுத்து, தீர்ப்பை அறிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வாழ்த்தி அவர் கடிதங்களை அனுப்பினார்.

இவர், இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிய போது அவருக்கு வயது 52. அவரது உறவினர்கள் இந்த உண்ணாவிரதத்தை முறிக்கும்படி பல முறை கேட்டுக் கொண்ட போதும், அவர் அதை முடிக்காமல் பிடிவாதமாக இருந்து வந்தார்.

தற்போது இதுகுறித்து அவர் கூறுகையில், 28 வருட உண்ணாவிரதத்திற்கு பிறகு பகவான் ராமரின் ஆசீர்வாதங்களை பெற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், ராமரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னரே அயோத்தி சென்று உணவு எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை அயோத்திக்கு அழைத்துச் செல்லவும், விரைவில் சரயு ஆற்றின் கரையில் விரதத்தை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதியை ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை இறுதி செய்துள்ள நிலையில், இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ளலாம் என இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவரது திட்டம் சீர்குலைந்தது.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

35 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago