உரிய நேரத்தில் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அவர் பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை நீக்கி , யூனியன் பிரதேசமாக மாற்றியது தற்காலிகமானது.370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தில் பரவலாக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு நிகழ்ந்துள்ளது. பஞ்சாயத்து தேர்தல்களில் 51 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஜம்மு-காஷ்மீரை ஆட்சி செய்வார்கள்.நியாயமான மற்றும் அமைதியான முறையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்புகளில் எந்தவொரு தவறும் இல்லை .இப்பகுதியில் இரண்டு எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு 2022 -ஆம் ஆண்டுக்குள் ரயில்வேயுடன் இணைக்கப்படும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் “யாரும் தங்கள் நிலத்தை இழக்க மாட்டார்கள்” என்று பேசியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…