பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் கடந்த மாதம் 13-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நட்டா கொரோனாவில் இருந்து குணமடைந்த பின், அந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை செய்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்த ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
ஜனவரி 4-ஆம் தேதி மாநில கட்சித் தலைவர் பாட்டில், முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல் மற்றும் பிற மூத்த தலைவர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்புக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. ஜனவரி 5 முதல் 7 வரை அகமதாபாத்தில் நடைபெறும் பாஜக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் இணைப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
அதன்பின் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார். மேலும், தனது வருகையின் போது மாநிலத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…