கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்வி கூடுதல் செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும். அதன்படி, வருடாந்திர மெட்ரிகுலேஷன் தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி, மே 7 வரை நடைபெறும். CHSE-ஆல் நடத்தப்படும் 12-ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும். முன்னதாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை 11 நாட்களுக்கு கோடை விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…