கன்வார் யாத்திரை – 15 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர்

கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உ.பி. முதலமைச்சர் உத்தரவு.
‘கன்வார் யாத்திரை’ என்பது சிவபெருமானின் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதிக்கரைக்குச் சென்று, தங்களின் வீடுகளிலோ, அல்லது சொந்த ஊரிலோ உள்ள கோயில்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் எடுத்து பாதயாத்திரையாக செல்வது ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரை நடைபெறவில்லை.
இந்தாண்டு ஜூலை 14 ஆம் தேதி ’கன்வார் யாத்திரை’ தொடங்க உள்ளது. இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் வழித்தடங்களில், 15 நாட்களுக்கு திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரப் பிரதேச முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த யாத்திரைக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025