விஸ்ட்ரான் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை ஊழியர்கள் அடித்து நொறுக்கிய நிலையில் ,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டின் விஸ்ட்ரான் நிறுவனம் கர்நாடகா மாநிலத்தில் கோலாா் மாவட்டத்தில் உள்ள நரசாபுரா தொழிற்பேட்டையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்போன்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் 5000 -க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் வருவதாகக் கூறப்படுகிறது.இந்த 5000 பேரில் , 2000 பேர் ஒப்பந்தப் ஊழியர்கள் ஆவார்கள்.ஆனால் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.ஆகவே இது குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.அந்த சமயத்தில் ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அங்கிருந்த கணினிகள், மடிக் கணினிகள் ,வாகனங்கள் என அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.இது குறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதன் பின்பு விஸ்ட்ரான் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.மேலும் விஸ்ட்ரான் இன்ஃபோகாம் உற்பத்தி இந்தியாவின் துணைத் தலைவர் வின்சென்ட் லீவை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்பதை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…