KarnatakaElection2023 [Image source : News18/Shutterstock]
காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ளது.
கர்நாடகாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்பொழுது நிறைவடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
இத்தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. இத்தேர்தலில் சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
மக்கள் தங்களது வாக்குகளை அளிப்பதற்காக கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துவதற்கு தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. ஆனால், தங்களது வாக்குகளை செலுத்தாமல் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன்கள் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…