உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16 பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் சிலர் சாலைகளில் சுற்றித்திரிந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் நூதன தண்டனை மூலமாக கண்டித்தும், வழக்குப்பதவு செய்தும் ஏன் வாகனங்களைக்கூட பறிமுதல் செய்தும் வந்த நிலையில் 2வது நாளாக இன்றும் சாலைகளில் வாகன ஒட்டிகளின் நடமாட்டம் இருந்து தான் வருகிறது.தமிழகத்தில் காவல்துறை ஒரு அதிகாரி ஒருவர் கைஎடுத்து கும்பிட்டவாறு வெளியே வராதீர்கள் என்று வாகனஒட்டிகளை அறிவுறுத்தி அனுப்பினார்.அவருடைய இந்த அணுகுமுறையை கண்ட இளைஞர் ஒருவர் அவர் காலில் விழுந்தார். இந்த சம்பவம் ஆனது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் கொரோனா சாலைகளில் யாரும் வர வேண்டாம் என்று கர்நாடக போலீசார் மொத்தமாக சாலையில் நின்று கும்பிட்டபடி வாகனஒட்டிகளிடம் வேண்டி நின்றனர்.வீரியத்தை அறியாமல் இவ்வாறு வெளியே வருவது நியாயமா?இனி வரும் மே,ஏப்ரல் மாதத்தில் 13 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்ற சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தனது ஆய்வில் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் கொண்டது நம் நாடு அதில் இந்த கொலைக்கார வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் நிலைமை என்னவாகும்?100 கோடிக்கும் மேல் ஐனத்தொகை கொண்ட இந்திய மக்களை நினைத்து பாருங்கள்.. கட்டுக்குள் கொண்ட வர தவறினால் பின்னர் நேர்வதை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்..எனவே இவற்றை தடுத்து நம் அனைவரையும் பாதுக்காப்போம் ஒற்றுமையோடு செயல்படுவோம்..எனவே வீட்டினுள் இருங்கள்..கைகளை கழுவுங்கள்…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…