மறைந்த நடிகர் புனித ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 46 வயதுடைய நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இவரது உடல் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் பெங்களூர் கண்டீரவா ஸ்டுடியோவில் உள்ள அவரது பெற்றோர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்க ஏராளமான ஆலோசனைகள் கூறப்பட்டதாகவும், அவருக்கு தேசிய விருது அளிப்பது குறித்து தனக்கு விருப்பம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெற்றோர்களான ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பார்வத்தம்மா ஆகியோரின் நினைவிடங்களை போல நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…