KarnatakaElections2023Live: தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!

KarnatakaElection2023

வாக்குப்பதிவு நிறைவு:

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெருக்கின்ற நிலையில், தற்பொழுது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் :

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் :

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிலவரம் :

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குப்பதிவு நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடகா தேர்தல்:

ஜேடி(எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவேகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோர் கர்நாடக தேர்தலில் ஹாசனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

கர்நாடகா தேர்தல்:

கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவியும் காங்கிரஸ் தலைவருமான கீதா சிவராஜ்குமார் ஆகியோர் வாக்களித்தனர்.

மல்லிகார்ஜுன் கார்கே வாக்குப்பதிவு:

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது மனைவி ராதாபாய் கார்கே ஆகியோர் கலபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

பி.சி.நாகேஷ் வாக்குப்பதிவு:

மாநில அமைச்சரும், திப்டூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான பி.சி.நாகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் திப்பட்டூரில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு நிலவரம் :

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிலிண்டர்களுக்கு பிரார்த்தனை :

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான டி.கே.சிவகுமாரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு முன் புதுமையான சைகையை வெளிப்படுத்தினர். அதன்படி, காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே எரிவாயு சிலிண்டர்களுக்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

prayers to gas cylinders
prayers to gas cylinders [Image source : thequint]

எச்டி குமாரசாமி:

கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான எச்டி குமாரசாமி தனது குடும்பத்தினருடன் ராமநகராவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். சரியான வளர்ச்சி பெற மக்கள் ஜேடிஎஸ் வேட்பாளர்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் கட்சி ராஜாவாகும் என்று வாக்களித்த பின் தெரிவித்தார்.

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா:

கர்நாடகாவில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 1ம் தேதியான இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பெங்களூரு வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்