‘என்ட பேரு ஸ்டாலினாக்கும்’ – சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம். 

கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து உரையாட உள்ள நிலையில், இந்த மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையை தொடங்கினார். தமிழக முதல்வரின் மலையாளப் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் கரவோசை எழுப்பி மகிழ்ந்தனர்.

பின் பேசிய அவர், தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது. திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒற்றை தன்மையை உருவாக்க முயற்சி ஆங்கிலேயர்கள் செய்ய நினைக்காததை கூட பாஜக செய்ய முயல்கிறது ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது.

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேண்டும். போராட தயாராக இருக்க வேண்டும்.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago