கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், சுங்கத்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவர், முன்ஜாமீன் கோரி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதற்கு முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவரை வரும் 28-ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அந்த ஜாமீன் மனுவின் விசாரணை, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அந்த மனு விசாரணையின்போது, சிவசங்கரனுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை சார்பில் வாதாடப்பட்டது. எனவே சிவசங்கரனின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதன்பின் 6 மணி நேர விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை சிவசங்கரனை கைது செய்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை இன்று சிவசங்கரனை கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் ,அவருக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…