டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், டெல்லியில் கொரோனா பேரால் தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 24,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறிய முதல்வர், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் குறைந்த எண்ணிக்கையிலான ஐ.சி.யூ படுக்கைகளே உள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் 4,100 படுக்கைகளை வழங்கிய மத்திய அரசு, தற்பொழுது 1,800 படுக்கைகள் மட்டுமே வழங்கியதாக குற்றம் சாட்டினார். மேலும், படுக்கைகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர், அடுத்த 2-3 நாட்களில் 6,000 படுக்கைகள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…