ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் சிங்கங்களுக்கு ஊசி மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மூக்கு, தொண்டை மற்றும் சுவாசக் குழாயிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம் சோதனை செய்ததில் தொற்றானது வெளியிலிருந்து பரவியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
விலங்குகள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு உலகின் பிற இடங்களில் உள்ள மிருகக்காட்சிசாலையின் விலங்குகளின் சார்ஸ்-கோவ் 2 (கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. விலங்குகள் இந்த நோயை மனிதர்களுக்கு மேலும் பரப்ப முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
இந்த மாதிரியான தொற்றானது இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கும், டிசம்பர் மாதம் லூயிஸ்வில் மிருகக்காட்சிசாலையில் பனிச்சிறுத்தைக்கும் இருந்தது.
இந்த தொற்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று வகையைச் சேந்தது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு பூனைகள், நாய்கள்போன்ற விலங்குகளுக்கு கூட கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) சார்ஸ்-கோவ் -2 குறித்த முழுமையான ஆவணத்தைக் கொடுத்துள்ளது.
அதில் செல்லப்பிராணிகளிடையே செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…