இனி மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படும்..!- BMC அதிரடி அறிவிப்பு..!

மதுக்கடைகளிலிருந்து,வீட்டிற்கே சென்று மதுபானம் டோர் டெலிவரி செய்யப்படுவது மற்றும் அதற்கான விதிமுறைகள் குறித்து பிரஹன் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளன.
மும்பையில் கொரோனோவின் தாக்கமானது நாளொன்றுக்கு 9,327பேருக்கு என்ற வீதத்தில் பரவி வருகிறது.இதனால் கொரொனோ வைரஸ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,10,225ஆகும்.எனவே,கொரொனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநராட்சி முழுவதும் தியேட்டர்கள்,கடைகள், போன்ற மக்கள்அதிகம் கூடும் பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.எனவே கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க மதுக்கடை உரிமையாளர்களுக்கும் புதிய விதிமுறைகளை மும்பை மாநகராட்சியானது அறிவித்துள்ளது. அதன்படி,மதுக்கடை நடத்த லைசென்ஸ் பெற்றவர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, தனது உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படுவார்கள்,என்று அறிவித்துள்ளது.
இதன்காரணமாக,எந்தவொரு வாடிக்கையாளரும் மதுபானம் வாங்க மது கடைக்கு செல்ல அனுமதி இல்லை, அதற்கு பதிலாக மதுபானங்களை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்க டெலிவரி ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்.டெலிவரி வேலை செய்யும் நபர்கள் முகக்கவசம் அணிவது மற்றும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்ட அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும், என்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025