மத்திய பிரதேச பஸ் விபத்து – பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Published by
Rebekal

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சிதி மாவட்டத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிதி மாவட்டம் பட்னா கிராமம் அருகே 54 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் கால்வாய் மேம்பாலத்தில் வைத்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். சிலர் மட்டும் நீந்தி கரைக்கு வந்த நிலையில் கிராம மக்கள் அவர்களை மீட்டனர்.

இந்நிலையில், கால்வாயில் விழுந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மீட்பு  படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்த நிலையில், தற்பொழுது 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களுக்கு 5 லட்சம் நிதி உதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் அறிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

10 minutes ago

”ரயில்வே கிராஸிங்கில் சிசிடிவி கட்டாயம்” – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…

28 minutes ago

இந்தியா – இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்.!

லண்டன் : ஷுப்மான் கில் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

46 minutes ago

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

11 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

11 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

14 hours ago