தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளின் செலவை அரசே ஏற்கும் என மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர், அதில் முதன்மையாக அவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் உள்ளது, இதனால் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர், இந்த சூழலில் மக்களுக்கு உதவும் பொருட்டு மத்திய பிரதேச அரசு ஓரு திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்ஹான் கூறுகையில் ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வ-ரும் கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும், அதில் சிடி ஸ்கேன், மற்றும் ரெமிடிசிவர் தடுப்பூசி , பிற மருந்துகள், ரூம் வாடகை உணவு போன்றவைகளின் செலவுகள் அடங்கும் என்றும், மேலும் 2.42 கோடி ஆயுஸ்மான் பாரத் யோஜனா அட்டை வைத்திருப்போருக்க செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் மாநிலத்தில் 88 சதவீத மக்கள் நேரடியாக பயனடைவார்கள், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற மாநில அரசால் ரூ.5000 தொகையை முன்பனமாக செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் ஆயுஸ்மான் பாரத் யோஜனா அட்டை வைத்திருந்தாலும் மற்றொருவர் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…