மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் பகுதியில் பிங்கி (18) எனும் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது ஆண் நண்பரான ராமன் சிங்குடன் கடந்த வியாழக்கிழமை அன்று பிஜாபூரி எனும் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இது குறித்து பிங்கியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்,அவரை தேடும் பணி தீவிரமடைந்தது. தேடல்களுக்கு பின்னர், அவரது உடல் பிஜாபூரரி காட்டுக்குள் கண்டறியப்பட்டது. அவள் பின் தலையில் பலமாக அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
பின்னர், நடைபெற்ற தீவிர விசாரணையில் ராமன் சிங்குடன் பிங்கி சென்றது நிரூபணமாகி அவரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நடந்தவற்றை ராமன் சிங் போலீசில் கூறினார். அதாவது, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமன் சிங் பிங்கியிடம் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது பிங்கி மறுக்கவே, பிங்கியை தள்ளி விட்டார், இதில் பிங்கி தலையில் பலமாக அடிபட்டு இறந்துவிட்டார் என கூறினான். அதன் பின்னர் ராமன் சிங் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…