Sabarimalai Ayyappan Temple - Makara Jyothi Dharisan [File Image]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
ஜாக்கிரதை : அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அழைப்பிதழ்.! இணையவழி மோசடிகள்…
பொன்னம்பல மேட்டில் சரியாக 6.40 மணியளவில் சபரிமலை ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்த மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 3 முறை மகர ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு கண்கொள்ளா கட்சியாக அமைந்தது. பக்தர்கள், சுவாமியே சரணம் ஐய்யப்பா எனும் சரண கோஷங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கோஷமிட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
மகர ஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில், சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம், பமபை உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.
இன்று பந்தள அரச குடும்பத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆடை அணிகலன்களுடன் ராஜ அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் காட்சியளித்தார். ஜனவரி 20 வரையில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 21இல் பந்தள அரச குடும்பத்தின் தரிசனத்திற்கு பிறகு சபரிமலை சன்னிதானம் நடை சாத்தப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரியில் நடை திறக்கப்படும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…