கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணுக்கு இரவு 8 மணி நேரம் பயணம் செய்து வீட்டில் சேர்த்த பெண் ஆட்டோ ஓட்டுநர்.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது.இதனால் பாதிப்பும்,உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலக சுகாதார அமைப்பும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியது .பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தான் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பெண் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் அந்த பெண் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.இந்த சூழ்நிலையில்தான் பெண் ஆட்டோ ஓட்டுநரான லைய்பீ ஓய்ணம் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்துள்ளார். இரவு முழுவதும் சுமார் 8 மணி நேரம் ஆட்டோ ஒட்டி மறுநாள் காலை மலைப்பகுதியில் உள்ள அந்த பெண்ணை வீட்டில் சேர்த்துள்ளார்.இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பெண் ஓட்டுநரை நேரில் அழைத்து பாராட்டியது மட்டும் அல்லாமல் ,அவருக்கு ரூ.1,10,000 ஊக்கத்தொகையை வழங்கி சிறப்பித்துள்ளார்.மேலும் இந்த மணிப்பூரில் தொழில்முனைவோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கிய தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…