முதலமைச்சர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்யுங்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.மேலும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பால்ராம்பூர் கிராமத்தில் இரண்டு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று 22 வயது பெண் உயிரிழந்துள்ளார்.இரண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இது குறித்து கூறுகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றவாளிகள் எந்த பயமுமின்றி நடமாடுகிறார்கள்.அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் முதலமைச்சர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் .மேலும் வேறொருவரை முதல்வராக மாற்ற வேண்டும் அல்லது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தை கோரக்பூர் மடம் அல்லது ராம் ஜென்ம பூமி கோயில் கட்டப்பட்டு வரும் அயோத்தியாவுக்கு பாஜக திருப்பி அனுப்பினால் நல்லது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…