மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.லால்சிலியானா அவர் சிகிச்சை பெற்று வந்த அறையை, அவரே சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிசோரம் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.லால்சிலியானா தனது மனைவி மற்றும் மகனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், COVID-19 மருத்துவமனையான சோரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர் சிகிச்சை பெற்று வரும் மாடியை துடைத்து சுத்தம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் சிகிச்சை பெற்று வரும் அறையை சுத்தம் செய்வதற்காக துப்புரவாளரை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர முடியாத காரணத்தினால் அவரே துடைத்துள்ளார். இவர் சுத்தப்படுத்தும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டு வேலைகளை செய்வது எனக்கு புதிய வேலை அல்ல. வீட்டில் மட்டுமல்லாமல், பிற இடங்களிலும் அவ்வாறு செய்ய வேண்டி இருக்கும் போது நான் அதை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
மே-8ம் அவரது மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட பின் அவரது மனைவியும் அவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். பின் மே 11-ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மே-12ஆம் தேதி லால்சிலியானாவிற்கு ஆக்சிஜன் அளவு திடீரென வீழ்ச்சி அடைந்தது. பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது.
லால்சிலியானா இதுகுறித்து கூறுகையில், நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறோம். மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…