இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை விரைவில் தாக்கும் என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா அலை மிகவும் மோசமாக காணப்பட்டது. மத்திய அரசு இந்த இரண்டு அலைகளையும் சரியாக கட்டுப்படுத்தவில்லை. இதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மோசமாக காணப்பட்டது.எனவே, முதல் இரண்டு அறைகளில் நாம் எங்கெல்லாம் தவறு செய்தோமோ, அதையெல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசை குற்றம் சாட்டுடுவதற்காக வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. மூன்றாம் அலையை கட்டுப்படுத்த வெள்ளையறிக்கை உதவியாக இருக்கும் என்றும், மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என்பது மொத்த நாட்டுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார்.
மூன்றாம் அலை தோன்றிய பின்னும் இந்தியாவில்,புதிய அலை தோன்றலாம். நேற்று அதிகமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுள்ளது. மாநிலங்களுக்கிடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல், அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் எல்லாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுள்ளது. மோடியின் கண்ணீர் மூன்றாவது அலையில் மக்களை காக்காது. ஆனால் ஆக்சிஜன் இப்போதே தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது என தெரிரிவித்துள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…