மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு அளித்த 2 மணி நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுதபெள்ளி மண்டலில் உள்ள பிர்ஜெபள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு, அரிய வகை இரத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் உள்ளார். அவர்களது மகனுக்கு பெயர் ஹர்ஷ்வர்தன் (9).
ஹர்ஷவர்தனுக்கு நான்கு வயதாக இருந்தபோது, ஏழை தம்பதியினர் தங்கள் மகனுக்கு ரத்தம் தொடர்பான ஒரு அரிய வகை நோய் இருப்பதை அறிந்து கொண்டனர். அந்த சிறுவனுக்கு பல சிகிச்சைகள் மேற்கொண்ட போதிலும், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அந்த ஏழை தம்பதியினர் ரூ.4 லட்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், அந்த சிறுவனின் தாய் அருணா, புங்கனூர் நீதிமன்றத்தில் தனது மகனை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஒரு மனுவை அளித்தார். அந்த மனுவில், அரசாங்கம் தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவரது கருணைக் கொலைக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, மனுவைத் தாக்கல் செய்த இரண்டு மணி நேரத்திற்குள், சிறுவன் நீதிமன்றத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…