குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தின் அடிப்படையில் இவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கியிருந்த இந்த தீர்ப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இவருக்கு மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான நாள் தெரிவிக்கப்படாவிட்டாலும், தூக்கு கயிறு பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.
சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் தூக்கு தண்டனை பெற்ற முதல் பெண்மணி இவர்தான் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தூக்கு தண்டனை பெற்றுள்ள ஷப்னமின் மகன் முஹம்மது தாஜ், தனது தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தீர்ப்பை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது தாயாரை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனவே ஜனாதிபதிக்கு தான் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது தாயின் மரண தண்டனை குறைக்கப்பட்டு, தாயாருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சிறுவன் முகமது தாஜ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னமும் தனது மரண தண்டனையை குறைக்க வேண்டுமென உத்திரப்பிரதேச மாநில கவர்னருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…