முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி, அணைகள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை மார்ச் 31-ம் தேதி இன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மார்ச் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…