தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜனின் திருட்டு கும்பலில் இருந்தவன் பெயர், இஜாஸ் லக்டாவாலா. இவன் டில்லி, மும்பை போன்ற நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி , பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இவன் மீது 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. அண்மையில் மும்பை குற்றவியல் காவல் துறையினர் லக்டாவாலாவை பாட்னாவில் வைத்து கைது செய்தனர்.
பின் இஜாஸிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சியில் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தாவூத் தங்கி இருக்கும் முகவரிகளை வெளியிட்டுள்ள இஜாஸ் லக்டாவாலா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு, தாவூத் இப்ராஹிமுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த உறுதிபடுத்தப்பட்டுள்ள தகவலால் பாகிஸ்தானின் பொய்யான மறுப்பு தற்போது அம்பலமாகியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…