பர்வேஷ் முஷாரப் இராணுவ தளபதியான இவர் 2001 – 2008 வரை, பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நாட்டில் திடீரென அவசர நிலையை அமல் படுத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2013மாண்டு அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர் மீது, நாட்டில் தேவையில்லாமல் அவசர நிலையை பிரகடனம் செய்து, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும்,மேலும் இவர், நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில், பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்,பாகிஸ்தான் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷாரப்பிற்கு, தூக்கு தண்டனை விதித்தது. மேலும், அந்த தீர்ப்பில், இந்த தூக்கு தண்டனைக்கு முன்பே பர்வேஷ் முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் அந்த தீர்ப்புரையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி முஷாரப் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் மட்டுமின்றி உலகையே பேசவைத்துள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…