தாய்மை காலத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் – 9 நாட்களுக்கு பேறுகால விடுப்பு கேட்டு நாடளுமன்ற உறுப்பினர் கடிதம்!

பட்ஜட் கூட்ட தொடர் குறித்த பரப்பான சூழலில் தனக்கு 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தும் தற்பொழுது தான் அவசர அவசரமாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனல்பறக்கும் வேகத்துடன் வரவிருக்கின்ற நாட்கள் நகரும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
பரபரப்பான நாடாளுமன்ற பணிகள் ஒரு புறம் இருந்தாலும் சில நாட்களில் தனது மனைவிக்கு பிரசவம் ஆக இருப்பதால், குழந்தையை வளர்ப்பதில் மனைவிக்கு மட்டுமல்ல தனக்கும் பங்கு இருப்பதாகவும், எனவே தயவு கூர்ந்து வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி வரை தனக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்குமாறும் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு அவர்கள் விடுப்பு கேட்டு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025